Home Featured தமிழ் நாடு நடிகர் கார்த்திக் தலைமையில் 6 கட்சிகளைக் கொண்டு ‘விடியல் கூட்டணி’ உருவாகியது!

நடிகர் கார்த்திக் தலைமையில் 6 கட்சிகளைக் கொண்டு ‘விடியல் கூட்டணி’ உருவாகியது!

934
0
SHARE
Ad

karthik vidiyal kuuddaniசென்னை – நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் 6 கட்சிகளைக் கொண்ட ‘விடியல் கூட்டணி’ உருவாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் அளிக்கப்படாததால் 25 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக், தற்போது விடியல் கூட்டணியை உருவாக்கியுள்ளார்.

இந்தக் கூட்டணியில் அதிமுக அணியில் இருந்து வெளியேறிய டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன்சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித் சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி. நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.

இதுகுறித்து விடியல் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கார்த்திக் கூறியதாவது: ஜாதி, மத பேதமில்லாத, வளமான, இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய இருக்கின்றன. கூட்டணிக்கான பொதுவான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். ஆனால், மற்ற கூட்டணிகளில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்கள் கூட்டணி என்ன செய்யப் போகிறது என்பதை இனி மேல் பார்க்கப் போகிறார்கள். ‘விடியல் கூட்டணி’யின் செயல்திட்டங்கள் குறித்து நாளை நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்லவில்லை. என்றாலும் இந்தத் தேர்தலில் நாங்கள் யார் என்பதை மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் புரியவைப்போம் என கார்த்திக் கூறினார்.