Home One Line P2 நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் கார்த்திக் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

589
0
SHARE
Ad

சென்னை: நடிகர் கார்த்திக் மீண்டும் மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம் காரணம் அடையாறில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் 21-ஆம் தேதி இதே போன்ற மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் கார்த்திக் அதிமுக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். அதன் பிறகு அவரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.