Home One Line P1 ‘நான் அன்வாருடன் பேசவில்லை’- சாஹிட்

‘நான் அன்வாருடன் பேசவில்லை’- சாஹிட்

987
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனக்கும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் இடையில் நடந்த உரையாடலின் குரல் பதிவை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மறுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்க உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

“எனக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கும் இடையிலான உரையாடலைப் பதிவுசெய்ததாகக் கூறப்படும் குரல் பதிவு பரவுவது குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன், அதிர்ச்சியடைகிறேன்.

#TamilSchoolmychoice

“குரல் பதிவில் உள்ள உள்ளடக்கத்தை நான் கடுமையாக மறுக்கிறேன். அம்னோ பொதுப் பேரவைக்குப் பின்னர் எனக்கும் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் இடையில் எந்த உரையாடலும் இல்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

“இதன் சூத்திரதாரியை அடையாளம் காண காவல் துறையில் புகார் அளிக்க எனது அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இது “ஒரு தீய மற்றும் அருவருப்பான அரசியல் சூழ்ச்சி” என்று சாஹிட் குறிப்பிட்டார்.

“இது ஒரு தீய மற்றும் அருவருப்பான அரசியல் சூழ்ச்சி. இது அம்னோவை பலவீனப்படுத்தவும் அழிக்க ஏற்படுத்தப்பட்டது. அம்னோவை அழிக்க இது போன்ற மோசமான விளையாட்டுக்கள் இனி மேலும் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.