Home One Line P1 இரகசிய பதிவுகள் குறித்த விசாரணைகள் என்னவாயிற்று?

இரகசிய பதிவுகள் குறித்த விசாரணைகள் என்னவாயிற்று?

840
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தன்நலனுக்காக சமீபத்தில் உயர்மட்ட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் “இரகசிய” பதிவுகளின் விசாரணையின் முடிவுகளை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

“ஒரு மூத்த அமைச்சர் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகள், இப்போது அம்னோ மற்றும் பிகேஆர் தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் பற்றி நாம் கேள்விப்படுகிறோம்,” என்று சைட் இப்ராகிம் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், அன்வாருடன் பேசுவதாக வெளிவந்த குரல் பதிவை சாஹிட் மறுத்து, அது போலியானது என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்த பதிவுகளை பல கோணங்களில் பார்க்க வேண்டும். அவை உண்மையானவையா? உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதா? குற்றம் நடந்ததாக பதிவுகள் காட்டுகின்றனவா? இது போலியான செய்தி என்றால், அத்தகைய கூற்றுக்களை வெளியிடும் வலைத்தளங்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? ” என்று சைட் கேல்வி எழுப்பினார்.