விடியல் கூட்டணி 50 தொகுதிகளில் போட்டி: இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார் கார்த்திக்!

    850
    0
    SHARE
    Ad

    karthikசென்னை – விடியல் கூட்டணி 50 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், சென்னையில் இன்று பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    விடியல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடாளும் மக்கள் கட்சி 13 தொகுதிகளிலும், சிவசேனா கட்சி 35 தொகுதி களிலும், தமிழக மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    இது தொடர்பாக சென்னையில் நேற்று நிருபர்களிடம் கார்த்திக் கூறியதாவது: விடியல் கூட்டணிக்காக சென்னையில் (இன்று) பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன். தேர்தல் பிரச்சாரத்தில் பலரும் தனி நபர் தாக்குதலை முக்கியமாக வைத்து வாக்கு கேட்டு வருகிறார்கள்.

    #TamilSchoolmychoice

    எனது தேர்தல் பிரச்சாரத்தில் தனி நபர் தாக்குதல் இருக்காது. மக்களிடம் உள்ள பொதுவான பிரச்சினைகளை முன் வைத்தே வாக்கு சேகரிக்க இருக்கிறேன்.

    நாங்கள் போட்டியிடுவதாக திட்டமிட்டு அறிவித்த சில தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது 50 தொகுதிகளில் விடியல் கூட்டணி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால் அவர் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என கார்த்திக் கூறியுள்ளார்.