பைபிளை திரும்ப ஒப்படைப்பதாக அஸ்மின் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்தவுடன் முன்னாள் மஇகா தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சாமிவேலுவின் மகன் வேள்பாரி தனது டிவிட்டர் பக்கத்தில் “மலேசியர்களின் உண்மையான தலைவர்” என அஸ்மின் அலியைப் பாராட்டியுள்ளார்.
மலேசிய பைபிள் சமூகத்திடமிருந்து (பிஎஸ்எம்) கைப்பற்றிய 321 பைபிள்களையும் ஜாயிஸ் (சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை) இன்று சரவாக் தேவாலயங்களின் சங்கத்திடம் திரும்ப ஒப்படைத்தது.
இந்த தகவலை அஸ்மின் அலி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார்.
Comments