Home இந்தியா கிரிக்கெட்: 5-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி!

கிரிக்கெட்: 5-வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி!

613
0
SHARE
Ad

centuryஜார்க்கண்ட், நவம்பர் 17 – இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 5-வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 287 ரன்கள் வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இந்திய அணி  44 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரங்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசிவரை ஆட்டம் இழக்காமல் சிறப்பாக ஆடிய விராட் கோலி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 126 பந்துகளில் 139 ரன்கள் எடுத்திருந்தார். ஆட்ட நாயகன் விருதை இலங்கையின் மேத்யூஸ்ஸும் தொடர் நாயகன் விருதை இந்தியாவின் விராட் கோலியும் பெற்றனர்.

#TamilSchoolmychoice