பிரிஸ்பேன், நவம்பர் 17 – ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த ஜி-20 உச்ச நிலை மாநாடு உலகின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
புகழ்பெற்ற சிட்னி பாலத்தின் முன்னால் நின்று நினைவுப் புகைப்படம் எடுத்து மகிழும் உலகத் தலைவர்கள்…
சக்தி வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பில் உள்ள நாடுகள் உலகின் மொத்த உற்பத்தியின் 90 சதகிதத்தை ஆக்கிரமித்துள்ளன. உலகின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் இந்த ஜி-20 நாடுகளுக்குள் வசிக்கின்றார்கள். அது மட்டுமல்ல, அனைத்துலக வர்த்தகத்தின் ஐந்தில் நான்கு பகுதி இந்த நாடுகளால்தான் கையாளப்படுகின்றன.
எனவேதான், ஜி-20 மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அதன் உச்சநிலை மாநாடு அமெரிக்கா உள்ளிட்ட மற்ற உறுப்பிய நாடுகளின் தலைவர்களையும் ஒரே நகரில் கொண்டு வந்து சேர்க்கின்றது.
மாநாடு முடிந்து விடைபெற்றுச் செல்லும் சீன அதிபர் ஜின்பிங் தமது துணைவியாருடன்…
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்டுடன், ஜெர்மன் அதிபர் அஞ்சலா மெர்கல்….
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தோனிசியா அதிபர் விடோடோ ஜோகோவியும் தமது துணைவியாருடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விடைபெறும் காட்சி…
ஜி-20 மாநாட்டு நிகழ்வுகளுக்கிடையில் சந்தித்துக் கொள்ளும் பிரிக்ஸ் (BRICS) எனப்படும் கூட்டமைப்பின் தலைவர்கள், ரஷியாவின் அதிபர் புடின், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் அதிபர் தில்மா, சீன அதிபர் ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா…
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய அதிபர் டோனி அப்பாட்டுடன், அமெரிக்க அதிபர் ஒபாமா….
மாநாட்டின் நெருக்கடிகளுக்கிடையில் கோலா கரடிக் குட்டிகளை கொஞ்சி விளையாடும், அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட்…
மாநாடு முடிந்து விடைபெற்றுச் செல்லும் தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா….
பிரிஸ்பேன் இராணுவத் தளத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டு புறப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா…
படங்கள்: EPA