Home நாடு நெடுஞ்சாலையில் அடாவடியில் ஈடுபட்ட நபர் கைது

நெடுஞ்சாலையில் அடாவடியில் ஈடுபட்ட நபர் கைது

507
0
SHARE
Ad

lrg-11

பெட்டாலிங் ஜெயா, நவம்பர்  19 – சாலையில் அடாவடியில் ஈடுபட்ட ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் சுபாங் ஜெயா யூஎஸ்ஜே – ஷா ஆலம் பாதையில் அந்நபர் ஒரு பெண்மணியின் காரைத் தாக்கி அடாவடியில் ஈடுபட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து அன்றைய தினம் நள்ளிரவு நேரத்தில் சுபாங் ஜெயாவில் தமது வீட்டில் இருந்த அந்நபரை விசாரணையின் பொருட்டு போலீசார் கைது செய்தனர்.

சம்பவத்தன்று அலிசியா தியான் என்ற பெண்மணி தனது காரில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எஸ்யூவி வகை காரில் அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த நபர் அடிக்கடி பாதை (lane) மாறிக் கொண்டிருந்ததாகத்
தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அலிசியா, அந்த ஆடவரை நோக்கி பாதுகாப்பாகச் செல்லுமாறு கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து அந்நபர் சாலையின் நடுவே தனது காரை நிறுத்தியதால் அலிசியாவும் தனது காரை நிறுத்த வேண்டியதாயிற்று. பின்னர் காரிலிருந்து ஒரு பெண்மணியுடன் (அவரது மனைவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது) இறங்கி வந்த அந்த நபர், அலிசியாவின் காரில் ஓங்கி குத்தியுள்ளார்.

“எனது கார் ஜன்னல் கண்ணாடியில் குத்தினார். ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று உரக்கக் கேட்டதுடன் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் கார் வைப்பர்களை உடைக்க முற்பட்டார்” என்று இச்சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அலிசியா.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக 15 புகைப்படங்களையும் அப்பதிவில் சேர்த்துள்ளார். இப்படங்களில் அந்த ஆடவரின் அடாவடிச் செயலும் அவரது உருவமும் தெளிவாக பதிவாகியுள்ளது.

இதையடுத்து அலிசியாவின் இப்பதிவை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்துக்களை
தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானோர் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.