Home நாடு எனது அனுபவம் மற்ற வீரர்களுக்கு நல்ல பாடம் – லீ சோங் வெய்

எனது அனுபவம் மற்ற வீரர்களுக்கு நல்ல பாடம் – லீ சோங் வெய்

548
0
SHARE
Ad

leeகோலாலம்பூர், நவம்பர் 19 – தமது அனுபவங்கள் மற்ற இளம் வீரர்களுக்கு நல்ல பாடமாக அமையும் என ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியுள்ள பிரபல பூப்பந்து வீரர் லீ சோங் வெய் தெரிவித்துள்ளார்.

32 வயதான இவர் கோப்பன்ஹெகன்னில் நடைபெற்ற உலக பூப்பந்து போட்டியின்போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் தேர்ச்சி பெற தவறி உள்ளார்.

இதையடுத்து சோங் வெய்க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் அளவில் ஏற்பட்ட காயத்திற்கு மட்டுமே தாம் சிகிச்சை பெற்றதாகவும், தமக்கு வேறொன்றும் தெரியாது என்றும் சோங் வெய் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நம் உடலில் என்ன செலுத்தப்படுகிறது என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பதே இச்சமயம் நான் கூறும் அறிவுரை. நான் மருத்துவர்களை முழுமையாக நம்பினேன். நான் மருந்துகள் குறித்து அனைத்தும் அறிந்த நிபுணர் அல்ல.

ஒரு பூப்பந்தில் எத்தனை இறகுகள் இருக்கும் என்பதும் களத்தில் எத்தகைய பதற்ற உணர்வு தேவை என்பதும் மட்டுமே எனக்குத் தெரியும்,” என்று சோங் வெய் தெரிவித்துள்ளார்.

கோப்பன்ஹெகன் போட்டிக்கு முன்னர் நேரம் கிடைத்திருந்தால் தாம் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது இவ்வாறு யோசிப்பது காலம் கடந்த சிந்தனை என்பது தமக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

“இனி அனைத்துலக பூப்பந்து சங்கத்தின் விசாரணைக்காக காத்திருப்பது மட்டுமே ஒரே வழி. விளையாட்டாளர்களுக்கு எத்தகைய சிகிச்சை மற்றும் மருந்துகள் அளிக்கப்படுகின்றன என்பது குறித்து இனி தேசிய விளையாட்டு மையம் கூடுதல் கவனம் செலுத்தும் என நம்புகிறேன்.

இளம் விளையாட்டு வீரர்கள் எனது அனுபவத்தை நல்ல பாடமாகக் கருத வேண்டும். இந்தச் சிக்கலில் இருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ள சோங் வெய், ஒருவேளை தொடர்ந்து விளையாட தனக்கு தடை விதிக்கப்பட்டால், அழகான தோற்றம் இருப்பதால் தாம் நடிப்புத்துறைக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.