Home One Line P1 ஜீ ஜியாவிற்கு கைகொடுக்க, சோங் வெய் களத்தில் இறங்குகிறார்!

ஜீ ஜியாவிற்கு கைகொடுக்க, சோங் வெய் களத்தில் இறங்குகிறார்!

988
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூன்று முறை ஒலிம்பிக் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற சோங் வெய், ஜீ ஜியா அனைத்துலக அரங்கில் நிலையான வீரராக மாற உதவுவதற்காக மலேசிய பூப்பந்து கழகத்தில் (ஏபிஎம்) அதிக நேரம் செலவிட இருப்பதாக முடிவு செய்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுத் தகுதிக்காக அவரை சரியான பாதையில் கொண்டு வர எனது அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொள்ள எனது நேரத்தை ஒதுக்க உள்ளேன்” என்று சோங் வெய் கூறினார். இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் வீரர்களை தொடர்ந்து பார்வையிடுவேன் என்று சோங் வெய் கூறினார்.

ஆண்களுக்கான இரட்டையர் இணை கோ வி ஷெம்டான் வீ கியோங் மற்றும் கலப்பு இரட்டையர் இணை சான் பெங் சூன்கோ லியு யிங் ஆகியோரின் வெளியேறியதிலிருந்து இளைஞர்களுக்கு வழிகாட்ட அணியில் மூத்தவர்கள் யாரும் இல்லை என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இளைஞர்களின் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன். அவற்றை வளர்ப்பதற்கு மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும். மேலும் எனது அனுபவம், அறிவு அனைத்தையும், ஜீ ஜியா மற்றும் இதர விளையாட்டாளர்களுக்காக ஊக்குவிககும் வகையில் வெளிப்படுத்துவேன், ”என்று அவர் கூறினார்.

கடந்த வாரம் தைவானில் நடந்த பூப்பந்துப் போட்டியில், இந்தோனேசியாவின் ஷெசர் ஹிரென் ருஸ்டாவிடோவிடம், ஜீ ஜியாவின் அதிர்ச்சி தரும் தோல்விக்கு மன சோர்வு காரணமாக இருந்துள்ளது. 21 வயதான இவர் கடந்த மாதம் பாசலில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியுள்ளார். அதே போல், தாய்லாந்தில் நடைபெற போட்டியில் அரையிறுதி வரை முன்னேறியுள்ளார்.

ஜீ ஜியாவின் போராட்டம் சாதாரணமானது, ஏனென்றால் அவர் ஜனவரி முதல் கிட்டத்தட்ட இடைவிடாத போட்டிகளில் விளையாடி வருகிறார். நம் உடல் ஓரளவுக்குதான் தாங்க இயலும்என்று சோங் வெய் கூறினார்.

அவரும் மனதளவில் சோர்வாக இருக்கிறார். ஒவ்வொரு போட்டிகளிலும் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் நான் அதே சவாலை எதிர்கொண்டேன். அவர் உணர்ச்சிவசப்படக்கூடாது, ஆனால் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நான் பயிற்சியாளர் ஹேண்ட்ராவானுடன் ஜீ ஜியா பற்றி பேசினேன். ஜீ ஜியா தன்னை புதுப்பித்து அடுத்த வாரம் சீனாவில் நடைபெறும் போட்டிக்கு தயாராக வேண்டும்.” என்று சோங் வெய் குறிப்பிட்டார்.