உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் அமைச்சரான ஹசான் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலுலின் விலை பங்குகளின் மேலாண்மையைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும், ரோன்97 ப-க்கு பயன்படுத்தப்பட்ட அதே கணக்கீட்டு முறை தான் இதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாத இறுதியிலும் அந்த மாத எண்ணெய் விலை அறிவிக்கப்படும் என்றும், மாதாந்திர பங்குகளைப் பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் ஹசான் தெரிவித்தார்.
வரும் டிசம்பர் 1 முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும், சராசரி விலையை நிர்ணயம் செய்ய நவம்பர் 20 முதல் 30-ம் தேதி வரையிலான நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.