Home இந்தியா உலக அமைதி, நல்லிணக்கத்தை கருப்பு பணம் சீர்குலைத்து விடும் – மோடி எச்சரிக்கை

உலக அமைதி, நல்லிணக்கத்தை கருப்பு பணம் சீர்குலைத்து விடும் – மோடி எச்சரிக்கை

586
0
SHARE
Ad

Narendra_Modi.06புதுடெல்லி, நவம்பர் 22 – உலக அமைதியையும், நல்லிணக்கத்தையும் கருப்பு பணம் சீர்குலைத்து விடும் என்று, பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற மோடி, கருப்பு பணத்தை மீட்பதில், உலக நாடுகளின் ஒத்துழைப்பை நாடினார். இந்த நிலையில் மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி பயணம் குறித்து, தனது இணையத் தளத்தில் கூறியிருப்பதாவது:

“உலக நாடுகள் மத்தியில், கருப்பு பணத்தின் உண்மை நிலவரத்தையும், அதனை மீட்டுக் கொண்டு வருவது குறித்தும், இந்தியா தனது நிலையை தெரிவித்து உள்ளது.”

#TamilSchoolmychoice

“கருப்பு பணம் தொடர்பாக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு நாட்டினுடைய பிரச்சனை மட்டும் அல்ல. கருப்பு பணம் அபாயகரமானது”.

“உலக அமைதியையும், நாடுகளுக்கு இடையே உள்ள நல்லிணக்கத்தையும் கருப்பு பணம் சீர்குலைத்து விடும். தீவிரவாதம் தலை தூக்குவதற்கும், மோசடி, போதை பொருள் வர்த்தகம் நடைபெறுவதற்கும் வழிவகுக்கும்”.

“எனவே கருப்பு பணத்துக்கு எதிராக, உலக நாடுகள் ஒன்றுபட்டு போராட வேண்டும். இதுகுறித்து பேசுவதற்கு, ஜி20 மாநாட்டை தவிர்த்து, வேறு எந்த இடமும் சிறப்பானதாக இருக்காது”.

“இந்தியாவை உலக நாடுகள் மரியாதையுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் பார்க்கின்றன. நம் நாட்டுடனான தொடர்புகளை வலுப்படுத்த, உலக நாடுகள் ஆவலாய் உள்ளன”.

“வெளிநாட்டுப் பயணத்தின்போது நான் சந்தித்த உலக தலைவர்களிடம், ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரியுங்கள்)  திட்டம் பற்றி கூறினேன். அவர்களும், இந்த திட்டத்தில் பங்கு கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்”.

“நேர்மறையான சூழல்களை இந்தியாவுக்கு ஏற்பட்டு வருவதை என்னால் காண முடிகிறது. இதனால், இந்திய இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளும், அவர்களது வாழ்வில் வளமும் ஏற்படும்” என மோடி தெரிவித்துள்ளார்.