Home கலை உலகம் திருமண செய்திகள் எதிரொலி: புதிய படத்திலிருந்து திரிஷா நீக்கம்!

திருமண செய்திகள் எதிரொலி: புதிய படத்திலிருந்து திரிஷா நீக்கம்!

699
0
SHARE
Ad

Thrishaசென்னை, நவம்பர் 22 – நிச்சயதார்த்தம், திருமணம் என திரிஷாவைப் பற்றி தொடர்ந்து வந்த செய்திகள் காரணமாக, ஒரு புதிய படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

வாயை மூடி பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் வருண் மணியன். இருவரும் கட்டிப் பிடித்தபடி உள்ள படங்கள் இணையத்தளத்தில் உலா வருகின்றன.

வருண் மணியன் அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை திரிஷா அணிந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை திரிஷா மறுத்தார். திருமண நிச்சயதார்த்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான நாள். அது நடக்கும் போது சந்தோஷமாக அறிவிப்பேன் என்றார்.

#TamilSchoolmychoice

ஆனால் நிச்சயதார்த்தம் நடந்ததை அவர் மறைக்கிறார் என்றும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் திருமணத்தை முடிக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமண குழப்ப செய்திகள் காரணமாக திரிஷாவுக்கு வந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கைமாறுகின்றனவாம். அவர் ஏற்கனவே ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை ‘உதயம் என்எச்4′ என்ற படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். ஜெய், திரிஷா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது திரிஷாவுக்கு பதில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.