தற்போது, அவர் நடித்து உருவாகியுள்ள ராங்கி திரைப்படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் எப்போதும் பதற்றம் கலந்த வீரத்துடன் செயல்படும் நபராக திரிஷா காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 22-ஆம் தேதியன்று, திரிஷா, ராங்கியின் முதல் தோற்றத்தை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
எங்கேயும் எப்போதும் திரைப்படப் புகழ் இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படமும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமீபத்தில் வெளியாகி சமூகப் பக்கங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: