Home Video திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு முன்னோட்டக் காணொளி வெளியீடு!

திரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு முன்னோட்டக் காணொளி வெளியீடு!

987
0
SHARE
Ad

சென்னை: திரிஷாவின் 36-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் பரமபதம் விளையாட்டு படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் திரிஷா, நந்தா, வேல ராமமூர்த்தி, .எல்.அழகப்பன் ஆகியோர் நடித்து வருகின்றனர். உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம் திகில் மற்றும் அரசியல் சார்ந்து நகர்த்தப்பட்டுள்ளது.

தனித்து திரைப்படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை நயந்தாராவிற்குப் பிறகு திரிஷாவும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice