Home உலகம் குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்துள்ளது!

குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வட கொரியா சோதனை செய்துள்ளது!

861
0
SHARE
Ad

தென் கொரியா: வட கொரியா தரப்பு மீண்டும் அடையாளம் தெரியாத குறைந்த தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையை செலுத்தியுள்ளதாக, தென் கொரியா குற்றம் சாட்டி உள்ளது.

ஜப்பான் கடற்கரையில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டு உள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. உள்நாட்டு நேரப்படி காலை 9:06 மணிக்கு வட கொரியா, ஓன்சான் கடற்கரை நகரத்தில் இருந்து கிழக்கு நோக்கி ஓர் ஏவுகணையை செலுத்தி இருக்கிறது என்றும், இந்த ஏவுகணை 70 முதல் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது என்றும் தென் கொரியா ஓர் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா, அமெரிக்காவுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதன் முறையாக இப்படிப்பட்ட நடவடிக்கையில் அந்நாடு இறங்கியுள்ளதாக தெரிகிறது.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோர் இடையில், அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.