Home One Line P1 பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்துள்ளது!

பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைந்துள்ளது!

837
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொடர்ந்து மூன்றாவது வாரமாக, இன்று நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

ரோன்97 பெட்ரோல் 36 சென் குறைந்து லிட்டருக்கு 1.74 ரிங்கிட் ஆகவும், ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு 38 சென் குறைந்து 1.44 ரிங்கிட்டாகவும் விற்பனை செய்யப்படும்.

டீசலின் விலையும் 12 சென் வீழ்ச்சியடைந்து லிட்டருக்கு 1.75 ரிங்கிட் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

#TamilSchoolmychoice

புதிய கட்டணங்கள் நாளை சனிக்கிழமை முதல் மார்ச் 27 வரை நடைமுறைக்கு வரும்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்ட தகராறு மற்றும் கொவிட் -19 தொற்றுநோயால் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.