ஜெனீவா: கொவிட்-19 பெருந்தொற்றை முழுமையாகத் தடுக்காவிட்டால் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றுவிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் கூறியுள்ளார்.
“இந்த வைரஸ் கட்டுப்படுத்தக்கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதைத் தடுக்க வேண்டும். காட்டுத்தீ போல் பரவ நாம் அனுமதித்தால், குறிப்பாக உலகின் மிக பலவீனமான பகுதிகளில், இது மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லும்” என்று குட்டெரெஸ் நேற்று வியாழக்கிழமை ஸ்பூட்னிக் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“இந்த உலக நெருக்கடிக்கு அனைத்து உலகத் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட நடவடிக்கையை எடுக்குமாறு நான் அழைக்கிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.
ஐநா வரலாற்றில் இது மாதிரியான மிக மோசமான சுகாதார நெருக்கடியை இதுவரை கண்டதில்லை என்று அவர் கூறினார்.
“ஐநாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் உலகளாவிய சுகாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்கிறோம். மனித துன்பங்களை ஏற்படுத்துகிறது. பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.