Home One Line P1 கொவிட்-19: 130 புதிய சம்பவங்கள் பதிவு- மொத்த சம்பவங்கள் 1,030-ஆக உயர்வு!

கொவிட்-19: 130 புதிய சம்பவங்கள் பதிவு- மொத்த சம்பவங்கள் 1,030-ஆக உயர்வு!

580
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை நாட்டில் மேலும் 130 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரை, நாட்டில் பதிவான மொத்த சம்பவங்கள் 1,030-ஆக உயர்ந்தது.

26 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 12 நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். இதுவரையில் மொத்தம் 87 பேர் குணமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், இன்று பதிவான 130 சம்பவங்களில், 48 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த கூட்டம் தொடர்பானவை என்று அவர் குறிப்பிட்டார்.