Home One Line P1 பெட்ரோல் மானியம்: கார்களுக்கு 30 ரிங்கிட், மோட்டார் சைக்கிள்களுக்கு 12 ரிங்கிட்!

பெட்ரோல் மானியம்: கார்களுக்கு 30 ரிங்கிட், மோட்டார் சைக்கிள்களுக்கு 12 ரிங்கிட்!

896
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெட்ரோல் மானியத் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்று உள்நாட்டு வணிக மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம், அரசாங்கம் பண உதவியை வழங்கும். இது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பெறுநரின் கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மானிய விகிதம் கார்களுக்கு மாதத்திற்கு 30 ரிங்கிட் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 12 ரிங்கிட் என்று அவர் புத்ராஜெயாவில் இன்று திங்கட்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த மானிய திட்டத்தின் மூலம் சுமார் 2.9 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.