நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சட்டவிரோத கூட்டங்கள் மீண்டும் வன்முறையாக மாறியதை அடுத்து, ஹாங்காங்கின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் தீ முட்டியதோடு இல்லாமல், சாலைகளை தடுத்து, வங்கிகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் கடைகளை சேதப்படுத்தினர் என்று அது குறிப்பிட்டிருந்தது.
மேலும், காவல் துறையினர் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாகவும், அச்சம்பவ இடத்தில் ஒரு நிருபர் தாக்கப்பட்டதாகவும் கூறினார்.
விரைவாக மோசமடைந்து வந்த சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில், காவல் துறை கண்ணீர் வாயுக்கள் மற்றும் இரப்பர் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருத்தமான சக்தியுடன் போராட்டத்தை அடக்கும் நடவடிக்கையை நடத்தியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.