Home One Line P1 காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கையை பார்வையிட்ட மாமன்னர்!

காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கையை பார்வையிட்ட மாமன்னர்!

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, மார்ச் 18 முதல் 31 வரை அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் மக்களை வலியுறுத்தினார்.

இஸ்தானா நெகாராவின் இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம், மாமன்னர் களத்தில் இறங்கி காவல் துறையினருடன் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் காணொளியைக் காண முடிந்தது. தலைநகரைச் சுற்றியுள்ள நிலைமையை பார்வையிட மாமன்னர் தனது சொந்த வாகனத்தை ஓட்டிச் சென்றார்.

#TamilSchoolmychoice

“சாலையில் இன்னும் நிறைய வாகனங்கள் இருப்பதை நான் கவனித்தேன். இது நிச்சயமாக ஒரு நல்ல சூழ்நிலையைக் குறிக்கவில்லை.”

“குறிப்பாக கோலாலம்பூரில் உள்ள மலேசியர்களின் நன்மைக்காக இது விரைவில் குறைக்கப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று மாமன்னர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.