Home One Line P1 கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட மீதமுள்ள 4,000 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

கொவிட்-19: ஸ்ரீ பெட்டாலிங் மசூதி கூட்டத்தில் கலந்து கொண்ட மீதமுள்ள 4,000 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

472
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மீதமுள்ள 4,000 பங்கேற்பாளர்களை கொவிட் -19 சோதனையில் கலந்து கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி அழைப்பு விடுத்தார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று அக்கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று இன்று வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இஸ்மாயில் கூறினார்.

“நான் நேற்று குறிப்பிட்ட 4,000 பங்கேற்பாளர்கள் வரவில்லை, தானாக முன்வந்து மருத்துவமனை அல்லது கிளினிக்கிற்குச் செல்லவில்லை (பரிசோதனைக்கு).”

#TamilSchoolmychoice

“காவல்துறையினர் ஏற்கனவே அத்தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் கொடுத்தனர்.”

“எனவே பரிசோதனைக்கு தாங்களாகவே முன்வருவது நல்லது. இல்லையேல், காவல் துறையினர் வீட்டிற்கு வர வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.

இன்றுவரை, மலேசியாவில் 900 கொவிட் -19 சம்பவங்கள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில், 576 சம்பவங்கள் மற்றும் ஒரு மரணம் ஸ்ரீ பெட்டாலிங் கூட்டத்துடன் தொடர்புடையதாகும்,