Home One Line P1 கொவிட் – 19 : மலேசியாவில் 3-வது மரணம்

கொவிட் – 19 : மலேசியாவில் 3-வது மரணம்

449
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கொவிட்19 பாதிப்பு தொடர்பில் மலேசியாவில் மூன்றாவது மரணம் சம்பவித்துள்ளது. 58 வயதான இந்நபர் ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவராவார்.

கொவிட் -19 பாதிக்கப்பட்ட 152-வது நபர் என அடையாளம் காணப்பட்ட அவர் கடந்த மார்ச் 9-ஆம் தேதி சபாவிலுள்ள தாவாவ் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டார் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.27 அளவில் அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.