Home One Line P1 2,000 ரோஹிங்கியாக்கள் கொவிட்-19 பரிசோதனைக்காகத் தேடப்படுகின்றனர்!

2,000 ரோஹிங்கியாக்கள் கொவிட்-19 பரிசோதனைக்காகத் தேடப்படுகின்றனர்!

566
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் 2,000 ரோஹிங்கியாக்கள் கலந்து கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, கொவிட் -19 நோய் தொற்று தொடர்பான பரிசோதனையை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியை ரோஹிங்கியா தலைவர்கள் பரப்பி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ரோஹிங்கியா சொசைட்டி ஆப் மலேசியா (ஆர்எஸ்எம்) தலைவர் போ நிங் மைங் கூறுகையில், வாட்சாப் மற்றும் முகநூல் மூலம் குரல் பதிவும் காணொளி செய்தியும் அச்சமூகத்துடன் பகிரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதில் சம்பந்தப்பட்டவர்களை சோதனைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.

“சமூகத்தில் பலருக்கு படிக்கவும் எழுதவும் தெரியாது. எனவே செய்தியை முழுவதும் பெற இது மிகவும் பயனுள்ள வழியாகும்,” என்று அவர் கூறினார்.