Home உலகம் காஷ்மீர் தாக்குதல்: இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு பாகிஸ்தான் மறுப்பு!

காஷ்மீர் தாக்குதல்: இந்தியாவின் குற்றச்சாட்டிற்கு பாகிஸ்தான் மறுப்பு!

455
0
SHARE
Ad

Indiaஇஸ்லமாபாத், டிசம்பர் 9 – ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதக தாக்குதல்களில் இராணுவ வீரர்கள் பொதுமக்கள் என 23 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவுடன் நடைபெற்றது என இந்திய இராணுவத்தின் முக்கிய அதிகாரி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதியில் இருக்கும் தீவிரவாதிகளே காரணம் என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தாஸ்னிம் அஸ்லாம்  தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சையத்துக்கு பாகிஸ்தான் உதவவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ”இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் சையது அக்பரூதின் கூறிய கருத்துக்களை நாங்கள் ஆராய்ந்தோம்”.

“தீவிரவாதத்தை அப்பட்டமாக ஆதரிப்பதாக கூறப்படும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் உறுதியாக நிராகரிக்கிறது. தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் எங்கள் நாடு முன்னிலை வகிக்கிறது. மேலும். தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பாகிஸ்தான் தான் என யாரும் மறந்துவிடக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.