தற்போது 2–வது கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் குடிநீர் திட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதற்காக ரூ.1375 கோடி ஒதுக்கியுள்ளது சீனா.
இப்பணியை சீன மெஷினரி என்ஜினீயரிங் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இப்பணி முடிவடைந்தபின் நாள் ஒன்றுக்கு 54 ஆயிரம் கியூபிக் மீட்டர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 1000 கி.மீட்டர் குழாய்களை பதிக்கும் பணியும் நடைபெறுகிறது.
ஏற்கனவே, லக்விஜயா அனல்மின் நிலையத்தை ரூ.7 ஆயிரம் கோடி செலவில் கட்டி வருகிறது. சீனா, இலங்கை இடையேயான உறவை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறதாம்.