Home உலகம் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடம்! 8-வது இடத்தில் பாகிஸ்தான்!

ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடம்! 8-வது இடத்தில் பாகிஸ்தான்!

591
0
SHARE
Ad

iraq-MMAPவாஷிங்டன், டிசம்பர் 11 – அனைத்துலக அளவில் அபாயகரமான நாடுகள் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் உள்ளது. அப்படியலில் பாகிஸ்தான் 8-வது இடத்தில் உள்ளது என அமெரிக்காவின் ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனை சேர்ந்த ‘இன்டல் சென்டர்’ என்ற நிறுவனம் அனைத்துலக அளவில் மிக அச்சுறுத்தலான நாடுகள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.

கடந்த 30 நாட்களாக நடந்த தீவிரவாத சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு இந்த பட்டியலிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அதன்படி, ஈராக் முதலிடத்தில் உள்ளது. இங்கு வன்முறை சம்பவங்கள், தீவிரவாத அச்சறுத்தல் மிக அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் 8-வது இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இவை தவிர முதல் 10 நாடுகள் பட்டியலில் நைஜீரியா 2-வது இடத்திலும், சோமாலியா 3-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4-வது இடத்திலும், ஏமன் 5-வது இடத்திலும் உள்ளன.

சிரியா 6-வது இடத்திலும், லிபியா 7-வது இடத்திலும், எகிப்து 9-வது இடத்திலும், கென்யா 10-வது இடத்திலும் உள்ளன என இன்டல் சென்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது..