கோலாலம்பூர், டிசம்பர் 11 – நமது செல்லியல் வாசகர் கிள்ளானைச் சேர்ந்த கே.ஆர்.அன்பழகன் வாட்ஸ்எப் நட்பு ஊடகத்தின் மூலம் ஓர் அபூர்வ புகைப்படத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
தந்தை பெரியாருடன், கால ஓட்டத்தில் தமிழகத்தின் முதல்வர்களாக உருவெடுத்த மூவர் ஒருசேர ஒரு காலத்தில் மகிழ்ந்திருந்த மிக அபூர்வமான அந்தப் புகைப்படத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
தந்தை பெரியாரின் தலைமை சீடர் அறிஞர் அண்ணாத்துரை தமிழகத்தில் 1967ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்து முதன் முதலாக திராவிடப் பாரம்பரிய கட்சி ஆட்சி முறைக்கு வழிகோலியவராவார்.
அவரது மறைவுக்குப் பின் கலைஞர் மு.கருணாநிதியும், அவருக்குப் பின்னர் பிரபல திரைப்பட நடிகர் எம்.ஜி.ஆரும் தமிழக முதல்வர்களாக பதவியேற்றனர். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் கலைக்கப்படாத முக ஒப்பனையுடனும், சினிமாவுக்கான அரும்பு மீசையுடனும் வித்தியாசமாக காட்சியளிப்பதைக் காணலாம்.