Home இந்தியா ரஷ்ய அதிபர் புடின் மோடியுடன் இன்று சந்திப்பு! 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

ரஷ்ய அதிபர் புடின் மோடியுடன் இன்று சந்திப்பு! 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

583
0
SHARE
Ad

modi putin (1)புதுடெல்லி, டிசம்பர் 11 – இந்தியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் அணுசக்தி, இயற்கை எரிவாயு, ராணுவ கொள்முதல் உட்பட 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புடின் நேற்றிரவு இந்தியா சென்றார். இவர் பிரதமர் மோடியுடன் இன்று சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவில் 20 முதல் 24 அணுமின்சக்தி உலைகளை அமைத்து கொடுக்க ரஷ்யா முன்வந்துள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பில் கையெழுத்தாகின்றன. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பது பற்றி பேச்சுவார்தையும் நடைபெறவுள்ளதாம்.

#TamilSchoolmychoice

மேலும் இயற்கை எரிவாயுவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் ரஷ்யா விரும்புகிறதாம். ரஷ்யாவை ஒட்டியுள்ள ஆர்டிக் கடல் பகுதியில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபடவும் ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாம்.

இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடக்கிறது. புடினுடன் வரும் ரஷ்ய தொழிலதிபர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இந்திய-ரஷ்ய தொழிலதிபர்கள் சந்தித்து இருதரப்பு வர்த்தகங்களை மேம்படுத்துவது பற்றி பேசுகின்றனராம்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலர் அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் இருந்தது. தற்போது இவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

modi putinஉக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால், இந்தியாவிலிருந்து உணவு பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வைர ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் ரஷ்யாவிலிருந்து வைரம் இறக்குமதி செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடக்கிறது. டெல்லியில் இன்று நடைபெறும் உலக வைர மாநாட்டையும் புடின் தொடங்கி வைக்கிறார்.

ரஷ்யாவின் சுகாய் சூப்பர்ஜெட்-100 ரக போர் விமானங்கள், எம்.எஸ்-21 பயணிகள் விமானம் ஆகியவற்றை இந்தியாவுக்கு விற்பது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது. ரஷ்ய தொழில்நுட்பத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’’ உருவாக்கும் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.

இந்தாண்டில் மோடி-புடின் இடையே நடைபெறும் 3-வது சந்திப்பு இது. பிரேசிலில் கடந்த ஜூலை மாதம் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும், ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடந்த ஜி-20 மாநாட்டிலும் இருவரும் சந்தித்து பேசினர்.