Home நாடு இந்து அறப்பணி வாரியத்தின் பெரியார் நிகழ்ச்சி தொடர்பான அறிக்கை

இந்து அறப்பணி வாரியத்தின் பெரியார் நிகழ்ச்சி தொடர்பான அறிக்கை

413
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறவாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் எந்தத் தரப்புக்கு எதிராகவும் இந்து மதத்தைத் தற்காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளது.

ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் தற்போது இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இந்து அறப்பணி வாரியத்தின் அறிக்கை பின்வருமாறு:

#TamilSchoolmychoice

“ஈ.வெ.ராமசாமி (பெரியார் ) உபட எந்தவொரு அமைப்பு மற்றும் தனிநபர்களிடமிருந்து இந்து மதத்தை அவமதிக்கும் மற்றும் இழிபடுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக பினாங்கு இந்து அறப்பணி வாரியம் இந்து மதத்தை பாதுகாக்கும்.

மலேசிய இந்துக்களாகிய நாங்கள் கடவுள், ஆதியும் அந்தமுமானவராக நம்புகிறோம். தேசியக் கோட்பாடு கொள்கைகளின்படி வாழ்கிறோம்.

தேசியக் கோட்பாட்டின் முதல் கொள்கை இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது ஆகும்.

நாங்கள் பினாங்கில் உள்ள இந்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சட்டப்பூர்வ மத அமைப்பாகும். மேலும் 1906 ஆம் ஆண்டு இந்து அறவாரியம் சட்டத்தின்படி எங்கள் கடமையை நாங்கள் உறுதியாக நிலைநிறுத்துகிறோம்.

இந்து மதத்திற்கு எதிரான எந்தவொரு பொது நடவடிக்கைகள், பொது கருத்தரங்குகள், பொது சொற்பொழிவுகள் மற்றும் பொது விவாதங்களில் இருந்து விலகி இருக்குமாறு மலேசிய இந்துக்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.”