Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உள்ளூர் சிறப்பு டெலிமூவி

ஆஸ்ட்ரோ : கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உள்ளூர் சிறப்பு டெலிமூவி

286
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல்
‘எ விஷ் மேட் பை ஓல்ட் ரெட்டால்ஃப்’ எனும்
உள்ளூர் தமிழ் கிறிஸ்துமஸ் சிறப்பு டெலிமூவி
முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் – இப்பண்டிகைக் காலத்தில், எ விஷ் மேட் பை ஓல்ட் ரெட்டால்ஃப் எனும் ஓர் உள்ளூர் தமிழ் குடும்ப நாடக டெலிமூவியை ஆஸ்ட்ரோ முதல் ஒளிபரப்புச் செய்கிறது. டிசம்பர் 25, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் இந்தச் சிறப்பு டெலிமூவியை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு மகிழலாம்.

கே.எஸ்.மணியம், புவேந்திரா ஆனந்தராமன், பர்வின் நாயர் சுரேந்திரன், சாந்தினி நாகதுர்கா, தேவகன்னி மற்றும் பல உள்ளூர் கலைஞர்களைத் தாங்கி மலர்கிறது, எ விஷ் மேட் பை ஓல்ட் ரெட்டால்ஃப். பல ஆண்டுகளுக்குப் பிறகுத் தனது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்துக் கிறிஸ்துமஸைக் கொண்டாட விரும்பும் ரெட்டால்ஃப் என்ற 60 வயது முதியவரை இந்தக் குடும்ப நாடக டெலிமூவி சித்திரிக்கின்றது.

தனது குடும்பத்திலிருந்து பிரிந்து, ஒரு பெரிய மற்றும் ஆடம்பரமானப் பங்களாவில் தனியாக வசித்து வந்தார், ரெட்டால்ஃப். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளான மார்க், ஸ்டீவன் மற்றும் கிறிஸ்டின் ஆகியோருடன் மீண்டும் இணைய ஏங்கினாலும் நேரம் அவரை அனுமதிக்கவில்லை.

#TamilSchoolmychoice

நீண்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் கிறிஸ்டின் அவரைச் சந்தித்து அவரது அன்பு மனைவியின் மறைவைத் தெரிவிக்கிறார். தனதுக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸைக் கொண்டாட விரும்பும் ரெட்டால்ஃப் ஒரு தந்திரத்தைத் திட்டமிட்டு அதைத் தனதுக் குழந்தைகள் கண்டுப் பிடிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் புத்திசாலித்தனமாகச் செயல்படுத்துகிறார். அவரது விருப்பப்படி, அவரதுக் குழந்தைகள் மீண்டும் ஒன்றிணைந்து, பண்டிகைக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். இருப்பினும், அவரது குழந்தைகள் உண்மையைக் கண்டறியவே திருப்பங்கள் ஏற்படுகின்றன.

ரெட்டால்ஃப்பின் குழந்தைகள் எப்படி உண்மையைக் கண்டறிகிறார்கள் மற்றும் அவரதுக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறியதா இல்லையா என்பதை அறியப் பிரபல உள்ளூர் இயக்குநரான வதனி குணசேகரனால் இயக்கப்பட்ட மற்றும் பிவி யுனிவர்சல் புரொடக்‌ஷன்சின் பிரகாஷ் சுப்ரமணியம் தயாரித்த இந்த டெலிமூவியை ஆஸ்ட்ரோ ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.