தென் கொரியாவிலிருந்து அமெரிக்கா நோக்கி 240 பயணிகளுடன் பயணமான அமெரிக்க ஏர்லைன்ஸ், விமானம் ஜப்பானை நெருங்குகையில் கடுமையான பனிப்புயல் நடுவானில் தாக்கியது.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த விமானி, அவசர அவசரமாக அவ்விமானத்தை டோக்கியோவில் தரையிறக்கினார். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த சூழலினால் விமானத்தில் பயணித்தவர்கள், சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் தற்பொழுது அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விமான பயணி ஒருவர் கூறுகையில், “விமானியின் பெரும் முயற்சியால் விமானம் தரையிறக்கப்பட்டது. அதன் காரணமாகவே நாங்கள் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.