Home உலகம் சிரியாவில் உணவு கிடைக்காமல் 300 பேர் பலி!

சிரியாவில் உணவு கிடைக்காமல் 300 பேர் பலி!

590
0
SHARE
Ad

articleபெய்ரூட், டிசம்பர் 29 – சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உணவு, மருந்துகள் கிடைக்காமல், கடந்த ஒரு மாதத்தில் 300 பேர் பலியாகி உள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு குழு தகவல் தெரிவிக்கிறது.

சிரியாவில் கடந்த 4   ஆண்டுகளாக அதிபர் ஆசாத்துக்கு எதிராக பிரிவினைவாதிகள் போராடி வருகின்றனர். அவர்களுடன் தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் சேர்ந்து   உள்நாட்டு போரை நடத்தி வருகின்றனர்.

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

#TamilSchoolmychoice

சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வந்தாலும், அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்று   ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிரியாவில் செஞ்சிலுவை சங்கம் உட்பட பல்வேறு தனியார் சமூக   நல அமைப்புகள் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அளித்து வந்தன.

சிரியா அரசு எதிர்ப்பாளர்களும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும்   இந்த அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களை அழிக்கின்றனர்.

சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு ஆண்டில்,   உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் 20,300 பேர் பலியாகி உள்ளனர்.

இவர்களில் 800 பேர் குழந்தைகள், 5537 பேர் பெண்கள் அடங்குவர் என்று   இங்கிலாந்தை சேர்ந்த சிரியா கண்காணிப்பு குழு  தகவல் வெளியிட்டது.