Home நாடு ஆதாரம் காட்டுங்கள் – பெர்காசா

ஆதாரம் காட்டுங்கள் – பெர்காசா

693
0
SHARE
Ad

p.i-balaகோலாலம்பூர், பிப்.28- அண்மையில் நாடு திரும்பியுள்ள தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் மங்கோலியா மாடல் அழகி அல்தான்துயா ஷாரீபுவின் கொலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குத் தொடர்புண்டு என்று கூறுவதற்கு தகுந்த ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும் என பெர்காசா வன்மையாகக் கூறியது.

பாலா ஆதாரம் காண்பிக்கத் தவறினால் எதிர் கட்சிக்கு ஆதரவான வழக்கறிஞர் கூட்டமொன்று நஜிப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையே களங்கம் உண்டு பண்ண சதி செய்கிறது என்று பொருள்படும் என  இப்ராகிம் அலி கூறியதாக உத்துசான் மலேசியா நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.

நாடு கடந்து வாழ்ந்துகொண்டிருந்த பாலா, கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கியதும் முதல் வேலையாக ஜூலை 2008-இல், தாம் செய்த முதல் சத்தியபிரமாணம் தான் உண்மையானது என்று சத்தியம் செய்தார்.

#TamilSchoolmychoice

அவ்விவகாரம் தொடர்பில்  நஜிப்புக்கு அல்தான்துயா கொலையில் தொடர்புண்டு என்று கூறியிருந்தார்.

எனவே, பாலா கூறியிருந்த கூற்றானது நஜிப்பைக் களங்கப்படுத்துவதற்காக கூறியதாக இப்ராகிம் அலி கூறினார்.