Home நாடு மகாதீர் புத்ரா கட்சியில் உறுப்பினராக இணைந்தார்

மகாதீர் புத்ரா கட்சியில் உறுப்பினராக இணைந்தார்

624
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து தன் அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க புத்ரா கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்தக் கட்சியில் உறுப்பினராக அவர் இன்று இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவராக இப்ராகிம் அலி செயல்படுகிறார்.

97-வது வயதிலும் தொடர்ந்து மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராடப் போவதாக மகாதீர் அறிவித்திருக்கிறார்.