‘ராகாவில் நீங்களும் வெல்லலாம்
ஓராயிரம் 2.0’
வானொலிப் போட்டியில் பங்கேற்று ரொக்கப் பரிசுகளை வெல்லுங்கள்
‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 2.0’ போட்டியைப் பற்றியச் சில விபரங்கள்:
• ராகா இரசிகர்கள் இப்போது முதல் மார்ச் 17 வரை ‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 2.0’ எனும் வானொலிப் போட்டியில் பங்கேற்று 1000 ரிங்கிட் வரை ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
• வானொலி அல்லது SYOK செயலியில் இரசிகர்கள் ராகாவைக் கேட்க வேண்டும். அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிஞ்ஞைக் கேட்டவுடன், 03-95430993 எனும் தொலைப்பேசி எண்களின் வழியாக ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.
• பங்கேற்பாளர்கள் மொத்தம் மூன்று சுற்றுகளில் பங்கேற்பர். முதல் சுற்றில், பின்னணியில் சத்தத்துடன் ஒரு பாடல் துணுக்கு ஒலியேற்றப்படும். பங்கேற்பாளர்கள் அப்பாடலின் தலைப்பை 5 வினாடிகளுக்குள் சரியாக யூகித்துக் கூற வேண்டும்.
• முதல் பதிலைச் சரியாக யூகித்த பங்கேற்பாளர்கள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்தச் சுற்றுக்கு முன்னேற விரும்பாத – முதல் பதிலைச் சரியாக யூகித்த – பங்கேற்பாளர்கள் 100 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
• இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறும் பங்கேற்பாளர்களுக்குத் தலைகீழாக மாற்றப்பட்டப் பாடல் துணுக்கு ஒலியேற்றப்படும். . பங்கேற்பாளர்கள் அப்பாடலின் தலைப்பை 10 வினாடிகளுக்குள் சரியாக யூகித்துக் கூற வேண்டும். இறுதிச் சுற்றுக்கு முன்னேற விரும்பாத – பதிலைச் சரியாக யூகித்த – பங்கேற்பாளர்கள் 300 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
• இறுதிச் சுற்றில், பங்கேற்பாளர்களுக்கு இரண்டு பாடல்களின் கலவையானத் துணுக்குகள் ஒலியேற்றப்படும். அவ்விரண்டு பாடல்களின் தலைப்புகளைச் சரியாக யூகித்துக் கூற வேண்டும். பதிலைச் சரியாக யூகித்த பங்கேற்பாளர்கள் 1000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.
• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.
‘ராகாவில் நீங்களும் வெல்லலாம் ஓராயிரம் 2.0’ பற்றிய மேல் விவரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக:
raaga.my
இலவச SYOK செயலியை உடனேப் பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!
www.facebook.com/RAAGA.my
www.instagram.com/raaga.my
https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw
வானொலியில் கேளுங்கள்: