நிம்மதியான வாழ்க்கைக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தமானது இதயத்தைப் பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.
இவற்றில் இருந்து விடுபட, சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு அளித்த கொடைகள்தான் பழங்களும், காய்கறிகளும். இதயம், உடல் உறுப்புகளைக் காக்க இயற்கை கொடுத்த சில கொடைகளைப் பற்றிப் பார்ப்போம்.
* அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும்.
* நெஞ்சுவலி வந்தால் பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்.
* ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு மற்றும் சீத்தாப்பழம் போன்ற பழங்களும் இதயத்துக்குப் பலம் சேர்க்கும்.
* ஒரு நெல்லிக்கனியில் நான்கு ஆப்பிள்களுக்கு இணையான சத்துகள் உள்ளன, இதனை லேகியமாகவும் செய்து சாப்பிடலாம்.