சவுதி மன்னர் அப்துல்லா காலமானத்தைத் தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று சவுதி அரேபியா வருகை தந்தார். சவுதி அரேபியா பயணத்துக்காகவே இந்தியாவின் ஆக்ரா பயணத்தை ரத்து செய்துவிட்டு ஒபாமா சவுதி சென்றார்.
ஒபாமாவின் இந்த பயணமானது அமெரிக்க-சவுதி எண்ணெய் வள ஒத்துழைப்பு மற்றும் வளைகுடா அரபு பிராந்திய பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் அண்டை நாடான ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கை ஓங்கியிருப்பது, அங்கு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
இவை தவிர, சர்வதேச எண்ணெய் சந்தையில் சவுதியின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்தும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.