Home வாழ் நலம் உடல் ஆரோக்கியத்தை காக்கும் சில உணவுகள்!

உடல் ஆரோக்கியத்தை காக்கும் சில உணவுகள்!

509
0
SHARE
Ad

veg2ஜன்வரி 28 – இன்றைக்கு மக்களை அதிகம் பயமுறுத்தும் உடல்நலப் பாதிப்புகளாக நீரிழிவும், ரத்த அழுத்தமும் இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை,துரித உணவுகள் என இதயத்தை பாதிக்கும் காரணிகள் இப்போது ஏராளம்.

நிம்மதியான வாழ்க்கைக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காமலும், குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தமானது இதயத்தைப் பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.

இவற்றில் இருந்து விடுபட, சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு அளித்த கொடைகள்தான் பழங்களும், காய்கறிகளும். இதயம், உடல் உறுப்புகளைக் காக்க இயற்கை கொடுத்த சில கொடைகளைப் பற்றிப் பார்ப்போம்.

#TamilSchoolmychoice

* அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும்.

fruits* மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* நெஞ்சுவலி வந்தால் பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்.

* ஆப்பிள், அன்னாசி, ஆரஞ்சு மற்றும் சீத்தாப்பழம் போன்ற பழங்களும் இதயத்துக்குப் பலம் சேர்க்கும்.

* ஒரு நெல்லிக்கனியில் நான்கு ஆப்பிள்களுக்கு இணையான சத்துகள் உள்ளன, இதனை  லேகியமாகவும் செய்து சாப்பிடலாம்.