இதுபோல் நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜெசிக்காவுக்கு இரண்டாவது பரிசாக ஒரு கிலோ தங்கம் வழங்கப்பட்டது. அந்த தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்தார்.
ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு அனைவரையும் சிலிக்க வைத்தது. அவரை நேரில் அழைத்து பாராட்ட நடிகர் சூர்யா முடிவு செய்தார். இதுபற்றி தகவல் ஜெசிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் சூர்யாவை சந்திக்க ஆர்வமாக சென்றார்.
தனது மனைவி ஜோதிகா கொடுத்து அனுப்பிய பரிசையும் ஜெசிக்காவிடம் வழங்கினார். சூர்யாவை சந்தித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று ஜெசிக்கா தெரிவித்தார்.