Home கலை உலகம் ‘சூப்பர் சிங்கரில்’ இரண்டாம் பரிசு பெற்ற ஜெசிக்காவுக்கு சூர்யா வாழ்த்து!

‘சூப்பர் சிங்கரில்’ இரண்டாம் பரிசு பெற்ற ஜெசிக்காவுக்கு சூர்யா வாழ்த்து!

526
0
SHARE
Ad

srya-jesikaசென்னை, மார்ச் 3 – விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நடந்த ‘சூப்பர் சிங்கர்’ பட்டத்துக்கான பாட்டு போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்து சிறுமி ஜெசிக்கா இரண்டாவது பரிசு பெற்றார். இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ் கைதட்டி பாராட்டினார்.

இதுபோல் நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜெசிக்காவுக்கு இரண்டாவது பரிசாக ஒரு கிலோ தங்கம் வழங்கப்பட்டது. அந்த தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக வழங்குவதாக அறிவித்தார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு அனைவரையும் சிலிக்க வைத்தது. அவரை நேரில் அழைத்து பாராட்ட நடிகர் சூர்யா முடிவு செய்தார். இதுபற்றி தகவல் ஜெசிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் சூர்யாவை சந்திக்க ஆர்வமாக சென்றார்.

#TamilSchoolmychoice

jesiikka-suryaஜெசிக்காவை பார்த்ததும் சூர்யா அன்பாக வரவேற்றார். ‘சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றதற்காக பாராட்டினார். இதுபோல் மேலும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்று வாழ்த்தினார்.

தனது மனைவி ஜோதிகா கொடுத்து அனுப்பிய பரிசையும் ஜெசிக்காவிடம் வழங்கினார். சூர்யாவை சந்தித்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்று ஜெசிக்கா தெரிவித்தார்.