Home நாடு பிரபல தொழிலதிபர் டத்தோ ஏ.டி.ராஜா காலமானார்!

பிரபல தொழிலதிபர் டத்தோ ஏ.டி.ராஜா காலமானார்!

723
0
SHARE
Ad

A.T.Rajah

கோலாலம்பூர், மார்ச் 3 – பிரபல தொழிலதிபரும், அரசியல் பொது இயக்கங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருபவருமான டத்தோ ஏ.டி.ராஜா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவிலுள்ள ‘மெட்ராஸ் கபே’ என்ற பிரபல உணவு விடுதியின் உரிமையாளரான இவர், மஇகா கிளைத்தலைவர், மத்திய செயலவை உறுப்பினர் என கடந்த காலங்களில் அரசியலில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிச்சடங்கு குறித்த விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.