Home உலகம் முதல் முறையாக 19 பிணைக்கைதிகளை விடுதலை செய்தது ஐஎஸ்ஐஎஸ்!  

முதல் முறையாக 19 பிணைக்கைதிகளை விடுதலை செய்தது ஐஎஸ்ஐஎஸ்!  

552
0
SHARE
Ad

isis-story_650_030215081950பெய்ரூட், மார்ச் 3 – சிரியாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்களில் 19 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக பிணைக்கைதிகளை கொடூரக் கொலை செய்யும் ஐஎஸ்ஐஎஸ் முதல் முறையாக பிணைக் கைதிகளை விடுதலை செய்துள்ளது.

ஈராக், சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் இருந்து பலரை பிணைக்கைதிகளாக பிடித்து செல்லும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அவர்களை கொடூரமாக கொலை செய்து அதனை காணொளியாக்கி உலகை அச்சுறுத்தி வருகின்றனர்.

பிடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்க பல்வேறு நாடுகளின் இராணுவம் முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் சிரியாவின் ஹசாகா நகரில் இருந்து கிறிஸ்தவர்கள் பலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

அவர்களில் 2 பெண்கள் உள்பட 19 பேர் நேற்று முன்தினம் விடுதலையாகினர்.

இது குறித்து சிரியாவின் மனித உரிமை அமைப்பு கூறுகையில், ” 2 பெண்கள் உள்பட 19 பேரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் விடுதலை செய்துள்ளனர். அது மகிழ்ச்சியை அளித்தாலும் இன்னும் 200 கிறிஸ்தவர்கள் அவர்களின் பிடியில் சிக்கி இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் எகிப்து நாட்டைச் சேர்ந்த 21 கிறிஸ்தவர்கள் தீவிரவாதிகளால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதன் காரணமாக கடத்திச் செல்லப்பட்டவர்களின் நிலை என்னவாகும் என்ற பதற்றம் சிரியாவில் நீடித்து உள்ளது.