Home நாடு டத்தோ ஏ.டி.ராஜா இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்!

டத்தோ ஏ.டி.ராஜா இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்!

648
0
SHARE
Ad

A.T.Rajahகோலாலம்பூர், மார்ச் 4 –உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமான டத்தோ ஏ.டி.ராஜாவின் இறுதிச் சடங்குகள் இன்று கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

No: 14, Jalan Cempedak,

Off Jalan Kovil Hilir,

#TamilSchoolmychoice

Sentul, Kuala Lumpur

(ஜாலான் ஈப்போவிலுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்திற்கு எதிர்ப்புறம் உள்ள சாலை)

இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பின்னர் அன்னாரின் நல்லுடல் இன்று பிற்பகல் 3.30 மணியளவில், செராஸ், மின்சுடலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.

கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவிலுள்ள ‘மெட்ராஸ் கபே’ என்ற பிரபல உணவு விடுதியின் உரிமையாளரான ஏ.டி.ராஜா, மஇகா கிளைத்தலைவராகவும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலப் பொருளாளராகவும்,  மத்திய செயலவை உறுப்பினராகவும் கடந்த காலங்களில் அரசியலில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

அதேவேளையில், நீண்ட காலமாக கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் வாரிய உறுப்பினராகவும், அறங்காவலர்களில் ஒருவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.டி.ராஜா, பிரபல வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற மேலவைத் துணைத் தலைவருமான டான்ஸ்ரீ ஜி.வடிவேலுவின் இளைய சகோதரருமாவார்.