Home இந்தியா நாளை இலங்கை தூதரகம் முன் “டெசோ’ சார்பில் முற்றுகை போராட்டம் – கருணாநிதி

நாளை இலங்கை தூதரகம் முன் “டெசோ’ சார்பில் முற்றுகை போராட்டம் – கருணாநிதி

518
0
SHARE
Ad

karu2சென்னை,  மார்ச் 4 – “”ராஜபக் சே ஒரு சர்வ தேச குற்றவாளி என, உலகம் உணர செய்வதற்காகத் தான், நாளை இலங்கை தூதரகம் முன், முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை, மறுகுடியமர்வு செய்வதற்காக, மத்திய அரசு சில ஆண்டுகளாக, நிதியுதவி அளித்து வருகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு, 500 கோடி ரூபாயை, இலவசமாக வழங்குகிறது. கடந்த நிதியாண்டில், இலங்கைக்கு, 290 கோடி ரூபாய் வழங்கியது.

#TamilSchoolmychoice

அதற்கு முந்தைய ஆண்டில், 180 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி, இலங்கையில் தமிழர்களின் நல்வாழ்வுக்காக செலவழிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் வழங்கப்படுகிறது. ஆனால், இலங்கை இந்த நிதியை தமிழர்களுக்காக பயன்படுத்துவதில்லை என்றும், சிங்களர்கள் பயன்பெறும் வகையிலே தான், இந்த நிதி திருப்பி விடப்படுகிறது எனவும், கூறப்படுகிறது.

இந்த நிதி உதவியைக் கொண்டு கட்டப்படும் வீடுகளில், பாதிக்கப்பட்ட தமிழர்களை குடியமர்த்துவதற்குப் பதிலாக, ஆக்கிரமிக்கும் சிங்களர்களைத் தான் குடியேற்றுகின்றனர்.

இந்த வேதனையெல்லாம் எதிரொலிப்பதற்காகத் தான், ராஜபக்சே ஒரு சர்வ தேச குற்றவாளி என, உலகம் உணரச் செய்வதற்காகத் தான், நாளை சென்னையில் உள்ள, இலங்கை தூதகரம் முன், “டெசோ’ சார்பில், முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு,கூறியுள்ளார்.