Home உலகம் தலாய்லாமாவிற்கு இலங்கை வர அனுமதி மறுப்பு – சீனா பாராட்டு!

தலாய்லாமாவிற்கு இலங்கை வர அனுமதி மறுப்பு – சீனா பாராட்டு!

603
0
SHARE
Ad

thalailamaபெய்ஜிங், ஏப்ரல் 4 –  திபெத் புத்த மதத் தலைவரான தலாய்லாமாவை இலங்கைக்கு அழைக்க அந்நாட்டில் உள்ள சில புத்த மதத் தலைவர்கள் விரும்பினர். ஆனால், தலாய்லாமா இலங்கை வர அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவிற்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் குவா சுணியிங் தெரிவித்துள்ளதாவது:- “தலாய்லாமா விவகாரத்தில் எங்களின் நிலையை நாங்கள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறோம். அவர் எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்”

“எங்கள் நட்பு நாடான இலங்கை, இந்த விவகாரத்தில் சீனாவின் கவலையை புரிந்து கொண்டு தலாய்லாமாவிற்கு அனுமதி மறுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதற்காக அந்நாட்டு அரசிற்கு எங்களின் பாராட்டை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களின் பாரம்பரிய நட்பை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.