Home வெளிநாடு டிசிஎஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு முன்னுரிமை – அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

டிசிஎஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு முன்னுரிமை – அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

689
0
SHARE
Ad

tcsநியூ யார்க், ஏப்ரல் 18 – அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆட்சேர்ப்பு, வேலை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அந்நிறுவன முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஸ்டீவன் ஹெல்ட் என்ற அந்த ஊழியர், சான் பிரான்ஸிஸ்கோ தலைமை நீதிமன்றத்தில் தான் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக கூறியுள்ளதாவது:-

“அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில், சுமார் 14,000 பேர் பணிபுரிகின்றனர். இதில் 95 சதவீதம் பேர் தெற்காசியர்கள், அதிலும் அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் இந்தியர்கள்.”

#TamilSchoolmychoice

“அதன் காரணமாக நிறுவனம் எப்பொழுதும் ஒருதலைபட்சமாகவே நடக்கிறது. ஆள் சேர்ப்பு, பதவி உயர்வு, வேலை ஒதுக்கீடு என அனைத்து விவகாரங்களிலும், அமெரிக்க ஊழியர்களுக்கு ஒரு நீதியும், இந்தியர்களுக்கு ஒரு நீதியும் என செயல்பட்டு வருகிறது. இங்கு தெற்காசியர்கள் அல்லாத சிலரும் பணிபுரிகின்றனர். ஆனால் ஏராளமான ஹெச்-1பி விசா பணியாளர்களே பெரும்பான்மையாக உள்ளனர்”

“அமெரிக்கர்களுக்கு எதிரான மனப்போக்கை இந்நிறுவனத்தில் அதிகம் காணலாம். அவர்கள் இந்தியர்களை அறிவாளிகளாகவும், அமெரிக்கர்களை அடிமைகளாகவும் நடத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.