பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது மற்றும் கனடாவிடம் யுரேனியம் பெறுவது உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இன்று அதிகாலை பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, புதுடெல்லி பாரதீய ஜனதா தலைவர் சதீஷ் உபத்யாய் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் வந்து வரவேற்றார்.
முன்னதாக கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடியின் விமானம் புதுடெல்லிக்கு வருவதற்கு முன் எரிபொருள் நிரப்புவதற்காக வான்கோவரில் சிறிது நேரம் நின்றது. தனது சுற்றுப்பயணம் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி மிகவும் திருப்திகரமாக இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.